குறுந்தொகை: பாடல் 112

குறுந்தொகை 112 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;

எள் அற விடினே, உள்ளது நாணே;

பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ

நாருடை ஒசியல் அற்றே

கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

ஆலத்தூர் கிழார்

கௌவை - அலர்

எய்த்தல் - இளைத்தல்

எள்ளற - எள்+அற ,பழிச் சொல் அறும் பொருட்டு

நார் - பட்டை

ஒசியல் - ஒடிந்த கிளை

கண்டிசின் - காண்பாயாக

ஊரவர் கெளவை எருஆக அன்னைசொல்

நீர்ஆக நீளும்இந் நோய். (குறள். 1147)