குறுந்தொகை: பாடல் 113

குறுந்தொகை 113 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்

சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:

இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்

துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்

கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;

ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.

மாதீர்த்தன்

துன்னுதல் - நெருங்குதல்

யாம் - உளப்பாட்டுப் பன்மை

கூழை - கூந்தல்

எருமண் - வண்டற் பொருக்கு மண், காய்ந்த சேற்று ஏடு (வலை தமிழ்)

சேறும் - செல்வோம், செல்வேம்