குறுந்தொகை: பாடல் 114
குறுந்தொகை 114 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!
செல்கம்; செல வியங்கொண்மோ அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது.
பொன்னாகன்
நெய்தற் பரப்பு - நெய்தற் பூப்படுக்கை
செல் - போகும்படி
வியங்கொள்ளுதல் - விடுத்தல்
அல்கல் - இரவு
என் மகள் - தலைவியின் பொம்மை
