குறுந்தொகை: பாடல் 115
குறுந்தொகை 115 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட! நின் அலது இலளே.
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது.
கபிலர்
பெரு நன்று - செயற்கரிய நன்மை
ஒரு நன்று - சிறு நன்மை
புரி - புரிதல்
கவர்பு - விரும்புதல்
மாண்டு - மாட்சிமைப்பட்ட
அளி மதி- முன்னிலை அசை
அமை - மூங்கில்
