குறுந்தொகை: பாடல் 116
குறுந்தொகை 116 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
இளங்கீரன்
தேம் பாய் கூந்தல் - நறுமணம் மிக்க கூந்தல்
உறந்தை - உறையூர்
பெருந் துறை- காவிரித் துறை
அறல் - நீரோடிய வழி மணலில் உண்டாகும் வரிகள்
நன்னெறிய(வ்)வே - அடர்ந்த,நெறிப்புடைய கூந்தல்
நன்றி- http://tamil concordance.in
