குறுந்தொகை: பாடல் 117

குறுந்தொகை 117 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்

பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு

கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்

கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்

வாராது அமையினும் அமைக!

சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

குன்றியனார்

பார்வல் - பார்வை

பருவரல் - துன்பம்

(வேர்)அளை - வளை/நண்டின் வீடு

அண்டர் - ஆயர்

கதழும் - விரைந்தோடும்