குறுந்தொகை: பாடல் 118
குறுந்தொகை 118 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
''வருவீர் உளீரோ?'' எனவும்,
வாரார் தோழி! நம் காதலோரே.
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது
நன்னாகையார்
புலம்பு- தனிமை
நள் - ஒலிக்குறிப்பு
நாரில் மாலை - அன்பில்லாத மாலைக் காலம்
நார் - அன்பு
கடவுநர்- விருந்தினரை வினவி அறிவோர்/ வினாவுவார்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.(குறள்.1224)
மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது (குறள் 1221)
நன்றி
