குறுந்தொகை: பாடல் 119

குறுந்தொகை 119 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை

கான யானை அணங்கியா அங்கு-

இளையள், முளை வாள் எயிற்றள்,

வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

சத்திநாதனார்

வெள் அரவு - வெண்ணிறப் பாம்பு

அவ் வரி - அழகிய கோடுகள்

குருளை - பாம்புக்குட்டி