குறுந்தொகை: பாடல் 121
குறுந்தொகை 121 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மெய்யே? வாழி! தோழி சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவழிப் பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் கூறியது.
கபிலர்
மை - கருமை
முசு - குரங்கு
கலை - ஆண் குரங்கு
ஆற்ற -தாங்கும் படி
பாயா - பாய்தல்
தப்பல் - தவறு
கோடு - கொம்பு/கிளை
