குறுந்தொகை: பாடல் 122

குறுந்தொகை 122 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன

குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே

வந்தன்று, வாழியோ, மாலை!

ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!

தலைமகள் பொழுது கண்டு அழிந்தது.

ஓரம்போகியர்

புன்புறம் - சிறிய முதுகு

குண்டு - பருத்த/ உருண்ட

ஆம்பல் - அல்லி

இனி - இப்பொழுது

வந்தன்று - வந்தது

கங்குல் - இரவு