குறுந்தொகை: பாடல் 124
குறுந்தொகை 124 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ பெரும! தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
உமணர் - உப்பு வணிகர்
சேர்ந்து கழிதல் - கூட்டமாகக் கூடிக் கடத்தல்
மருங்கு - பக்கம்
அகன் தலை - அகன்ற இடம்
என்றிர் - என்று சொல்கின்றீர்
---------------------------------------------------------------------------------------------------------------------------
த.வசந்தாள்
'செவ்வியல் தமிழ் இலக்கியங்களில் வணிகப் பதிவுகள்' தமிழியல் ஆராய்ச்சி (தொகுதி - 37) பொற்கோ (பதிப்பாசிரியர்), சென்னை: புலமை மன்றம் , 2020
