குறுந்தொகை: பாடல் 125

குறுந்தொகை 125 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,

உளெனே வாழி தோழி! சாரல்

தழை அணி அல்குல் மகளிருள்ளும்

விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்

பறை வலம் தப்பிய பைதல் நாரை

திரை தோய் வாங்கு சினை இருக்கும்

தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது.

அம்மூவன்

சாஅய் - பொலிவு இழந்து

தழை - தழை ஆடை

பறை - நாரையின் சிறகு

வாங்கு சினை - வளைந்த சினை

கண் மாறின்றே - இடம் பெயர்தல்