குறுந்தொகை: பாடல் 127

குறுந்தொகை 127 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

குருகு கொளக் குளித்த கெண்டை அயலது

உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம்

கழனி அம் படப்பை காஞ்சி ஊர!

ஒரு நின் பாணன் பொய்யன் ஆக,

உள்ள பாணர் எல்லாம்

கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே.

பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது

ஓரம்போகியார்

குருகு - அன்னம்

குளித்த - மறைந்த மூழ்கிய (முத்துக்குளித்தல்)

உரு - நிறம்,அழகு

தாமரை வால் முகை - வெண் தாமரை மொட்டு

வெரூஉம் - அஞ்சும்

உள்ள பாணர் - எல்லாப் பாணர்

கள்வர் - பொய்யர்