குறுந்தொகை: பாடல் 128

குறுந்தொகை 128 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

குண கடல் திரையது பறை தபு நாரை

திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை

அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்

சேயள் அரியோட் படர்தி;

நோயை நெஞ்சே! நோய்ப் பாலோயே.

அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம்

பரணர்

குணகடல் - கீழ்த்திசைக் கண் உள்ள கடல்

திரை - கடலுக்கு ஆகுபெயர்

பறை - சிறகு ( பறத்தல் தொழிலுமாம்)

தபு - இழத்தல்

திண்தேர் - வலிமையான தேர்

பொறையன் - சேர மன்னன்

தொண்டி - துறைமுகம்

அயிரை - ஒருவகை மீன்

ஆர் இரை - உண்ணும் இரை

சேயள் - தூரத்தில் உள்ள வள்

அரியோள் - கிடைத்ததற்கு அரியவள்

படர்தி - படருதல்,எண்ணுதல்

நன்றி

http://tamil concordance.co.in