குறுந்தொகை: பாடல் 129

குறுந்தொகை 129 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!

புலவர் தோழ! கேளாய் அத்தை;

மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்

பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்

கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்

புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது

கோப்பெருஞ்சோழன்

எலுவ(ன்) - நண்ப(ன்)

ஏமம் - பாதுகாப்பு, நலன்(ஏமம் ஏம் எனக் குறைந்தது)

அத்தை - அசை(உறவு முறைப் பெயர் அல்ல)

மாக் கடல் - கரிய கடல்

எண் நாள் - உவாவி லிருந்து எட்டாம் நாள்

பசுமை -இளமை,இளைய நிலா

கருப்பு - கூந்தல்

பிணித்தன்று - பிணித்தது