குறுந்தொகை: பாடல் 130

குறுந்தொகை 130 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;

விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரின்,

கெடுநரும் உளரோ? நம் காதலோரே.

பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ‘நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக!’ எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம் ஆம்.

வெள்ளி வீதியார்

தொடுதல் - தோண்டுதல்

புகுதல் - மறைதல்

விலங்குதல் - குறுக்கிடுதல்,தடுத்தல்

முந்நீர் - கடல்(ஆற்று நீர்+ஊற்று நீர்+மழை நீர்)

கால் - காற்று

நன்றி

http://tamil concordance.co.in