குறுந்தொகை: பாடல் 131
குறுந்தொகை 131 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே,
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது.
ஓரேருழவனார்
ஆடு அமை - அசைகின்ற மூங்கில்
வனப்பு - அழகு
(பணைத்தல் - பருத்தல்)
பணைத்தோள் - பருத்த தோள்
அமர்க்கண்ணி - போர் செய்யும் கண்கள்
ஆர் இடை - கடத்தற்கரிய இடைவழி
விதுப்பு - விரைவு, சுறுசுறுப்பு, வேட்கை, வருந்துதல்
நோகு -நோவேன்
நன்றி
