குறுந்தொகை: பாடல் 132
குறுந்தொகை 132 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே? ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள் மாஅ யோளே,
கழற்றெதிர்மறை
சிறைக்குடி ஆந்தையார்
கவவு - தழுவுதல்
கடுங்குரையள் - கடுமை உடையவள்
காமர் - விருப்பம்
வனப்பு - அழகு
குவவு - திரட்சி
கொடிக்கூந்தலள் - நீண்ட கூந்தல்
ஞாங்கர் - பக்கம்
சாஅய் -நுணுக்கம்
மாயோள் -:மாமை நிறம் உடையவள்
