குறுந்தொகை: பாடல் 133
குறுந்தொகை 133 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே தோழி! என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது.
உறையூர் முதுகண்ணன் சாத்தன்
புரவன் - தினைப் புனக்குறவன்
புடவை - தோட்டம்
கூழை - குறைக்கப்பட்ட
ஒலித்தல் - தழைத்தல்
கருவி - கதிர் கொய்யப்பட்ட தாள் / தட்டை
உரம் - வலிமை (திண்மை, திடம்)
செத்தும் - அழிந்தும்
நன்றி
