குறுந்தொகை: பாடல் 134
குறுந்தொகை 134 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அம்ம வாழி தோழி! நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது
கோவேங்கைப் பெருங்கதவன்
அம்ம - கேட்பித்தல்
நம்மொடு -:நம்மிடத்தில்
மன் - ஒழியிசை
தில்ல - அசைநிலை
குறும் பொறை - சிறு மலை
தடைஇய - பருத்த
