குறுந்தொகை: பாடல் 136

குறுந்தொகை 136 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''காமம் காமம்'' என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை

குளகு மென்று ஆள் மதம் போலப்

பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது

மிளைப்பெருங் கந்தன்

பிணி - நோய்

கடுத்தல் - மிகுதல்

தணிதல் - குறைதல்

குளகு - இலை தழை

பாணி - காலம்

காணுநர் - காமம் தோன்றுவதற்கு ஏற்றவர்

நன்றி: http://tamil concordance.in