குறுந்தொகை: பாடல் 137
குறுந்தொகை 137 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென் ஆயின் எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது
பாலை பாடிய பெருங்கடுங்கோ
அரிவை - விளி
நல்லகம் - நல்நெஞ்சம்
புலம்புதல் - தனிமையால் வருந்துதல்
அமைதல் - நெடிது தங்குதல்
தகவு - தகுதி பெருமை அருள் வலிமை அறிவு
