குறுந்தொகை: பாடல் 138

குறுந்தொகை 138 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-

எம் இல் அயலது ஏழில் உம்பர்,

மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி

அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது;

இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம்

கொல்லன் அழிசி

கொன் ஊர் - பெரிய ஊர்

உம்பர் - அப்பால்

ஊழ்த்த - மலர்ந்த

மணி - நீலமணி

பூவின் பாடு - பூ உதிர்தலால் உண்டாகும் ஓசை

பாடு - ஓசை