குறுந்தொகை: பாடல் 139
குறுந்தொகை 139 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
மனை உறை கோழி குறுங் காற் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்! ஐய! எம் தெருவே.
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
ஒக்கூர் மாசாத்தியார்
கோழி - பொதுப்பெயர்
பேடை - பெண் பறவை பெடை
வெருகு - காட்டுப் பூனை
அம்பல் - பழிபட வருதல்
வாரல் - வராதே
ஐயா - விளி
