குறுந்தொகை: பாடல் 140

குறுந்தொகை 140 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வேதின வெரிநின் ஓதி முது போத்து,

ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்

சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,

ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்

யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே?

பொருள்வயிற் பிரிந்த இடத்து, ''நீ ஆற்றுகின்றிலை'' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

அள்ளூர் நன்முல்லையார்

வேதினம் - ஈர்வாள் (ரம்பம்)

ஓதி - ஓந்தி (இடைக்குறை)

போத்து - ஆண் ஓந்தி

ஆறு செல் மாக்கள் - வழிப் போவார்

புள் - நிமித்தம்

சுரன் - பாலை நிலம்

உரன் - வலி( தனித்து உறைதல்)

எவ்வம் - துன்பம்

அழுங்கல் ஊர் - இரங்குதல் உடைய ஊர்

(ஊர் - ஆகுபெயர்)