குறுந்தொகை: பாடல் 141
குறுந்தொகை 141 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
“வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க” என்றோளே, அன்னை என, “நீ
சொல்லின் எவனோ?” தோழி! “கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ'' எனவே.
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மதுரைப் பெருங்கொல்லன்
வளைவாய் - வளைந்த வாய்
சிறுகிளி - சிறிய கிளி
விளை தினை - வினைத்தொகை
கடீஇயர் - கடியும் பொருட்டு
வன் மான் - வலிமையான விலங்கு (விலங்கின் பொதுப்பெயர்)
ஏறு - ஆண் புலி
படுபதம் - தக்க நேரம்
ஆர் இருள் - பேரிருள்
வாரல் - வருதலைத் தவிர்.
நன்றி
