குறுந்தொகை: பாடல் 142

குறுந்தொகை 142 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,

புனக் கிளி கடியும் பூங் கட் பேதை

தான் அறிந்தன்றோ இலளே பானாள்

பள்ளி யானையின் உயிர்த்து, என்

உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது;

தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம்.

கபிலர்

சுனைப்பூ - நீலம் முதலிய மலர்கள்

குற்று - பறித்து

தொடலை - மாலை

தைஇ - புனைந்து

புனக்கிளி - புனத்தில் படியும் கிளி

கடிதல் - ஓட்டுதல்

பூங்கண் - தாமரைப்பூ

பேதை - தலைவி

பள்ளியானை - படுக்கை கொண்ட யானை