குறுந்தொகை: பாடல் 143
குறுந்தொகை 143 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அழியல் ஆயிழை! அன்பு பெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பய மலை நாடன்;
நில்லாமையே நிலையிற்று ஆகலின்,
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.
மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்
அழியல் - வருந்தாதே
ஆயிழை - அணிகலன் அணிந்த தலைவி
அழிபு - வருத்தம்
பயம் - பயன்
கடடுப்பாடு - ஒப்புரவு
அம் கலுழ் மேனி - அழகு ஒழுகும் மேனி
