குறுந்தொகை: பாடல் 144

குறுந்தொகை 144 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

கழிய காவி குற்றும், கடல

வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே

பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,

இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப்

பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ

செல் மழை தவழும் சென்னி

விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்

கழி - கடல் அருகில் உள்ள நீரோடை/இடம்

கழிய - கழியின் கண் உள்ள

காவி - கருங் குவளை

குற்றும் - பறித்தும்

கடல - கடலின் கண்ணவாகிய/ கடலில் உள்ள

புணரி - அலை

பரல் - பருக்கைக் கற்கள்

பாழ் படுப்ப - மெல்லடி நோக