குறுந்தொகை: பாடல் 145
குறுந்தொகை 145 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கொல்லன் அழிசி
உறைபதி - தகுந்த ஊர்
கானலம் சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்
கொடுமை - பிரிவு நீட்டித்தல்
எற்றி - நினைத்து
ஆனா - அமையாத
உசாவுதல் - உறங்காது உறைவோள்
மாக்கள் - குறிப்புச்சொல்
நெட்டிரா - நீண்ட இரவு
