குறுந்தொகை: பாடல் 146
குறுந்தொகை 146 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்று நன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, ''வரைவு மறுப்பவோ?'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
வெள்ளிவீதியார்
அம்ம - கேட்பித்தற் கண் வந்தது
கொல் ,ஓ - அசைகள்
வெண் தலை - நரைத்த மயிர் உடைய தலை
சிதவல் - துகில்,துணி
பெரிது - பெருமை உடையது
அவை - பொதுவிடம், மன்றம்.(சுட்டுப் பெயர் அல்ல)
