குறுந்தொகை: பாடல் 147
குறுந்தொகை 147 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி கனவே!
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது.
கோப்பெருஞ்சோழன்
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்/
என்எம்மைப் பீழிப் பது (குறள்.1217)
நன்றி
