குறுந்தொகை: பாடல் 149

குறுந்தொகை 149 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அளிதோ தானே நாணே நம்மொடு

நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,

வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை

தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,

தாங்கும் அளவைத் தாங்கி,

காமம் நெரிதரக் கைந் நில்லாதே.

உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

வெள்ளிவீதியார்

உழந்தன்று - வருந்தியது

வான் பூ - வெண் பூ

ஓங்கு - உயற்சி

வீந்து - விழுந்து

உக்காஅங்கு - உக்கு, உகுதல்,கரைதல்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து(குறள். 1163)

காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு(குறள்.1251)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே/

யானோ பொறேன்இவ் இரண்டு(குறள். 1247)