குறுந்தொகை: பாடல் 150
குறுந்தொகை 150 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்? அன்னாய்!
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.
மாடலூர் கிழார்
சேணோன் - உயரத்தில் இருப்பவன், பரண்மிசை இருப்பவன்
மாட்டுதல் - கொளுத்துதல்
ஞெகிழி - கொள்ளி
வானமீன் - விண்மீன்
வயின்வயின் - இடந்தோறும் இடந்தோறும்
இமைத்தல் - ஒளி வீசுதல்
சாந்து - சந்தனம்
அகலம் - மார்பு
நன்றி
