குறுந்தொகை: பாடல் 152

குறுந்தொகை 152 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

யாவதும் அறிகிலர், கழறுவோரே-

தாய் இல் முட்டை போல, உட்கிடந்து

சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?

யாமைப் பார்ப்பின் அன்ன

காமம், காதலர் கையற விடினே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள்,

''நீ ஆற்றுகின்றிலை'' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.

கிள்ளிமங்கலங் கிழார்

கழறுதல் - சினத்தல்

கடிந்துரைத்தல் - இடித்துரைத்தல்

கையறவு - செயலற்ற நிலை

நன்றி

http://tamil concordance.in