குறுந்தொகை: பாடல் 153

குறுந்தொகை 153 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

குன்றக் கூகை குழறினும், முன்றிற்

பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,

அஞ்சும்மன்; அளித்து என் நெஞ்சம்! இனியே,

ஆர் இருட் கங்குல் அவர்வயின்

சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, “நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?” என்ற தோழிக்கு, “அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்” எனத் தலைமகள் கூறியது.

கபிலர்

கூகை - பேராந்தை

குழறுதல் - கத்துதல்

முன்றில் - இல்முன்,முற்றம்

உகளுதல் - தாவுதல்,ஓடித் திரிதல்,துள்ளுதல்,நழுவி விழுதல்.

ஆர் இருள் - செல்லற்கு அரிய இருள்

கங்குல் - இரவு

மாரி வானம் தலைஇ நீர் வார்பு,

இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,

இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்

தளர்அடி தாங்கிய சென்றது.... (அகநானூறு.128:12-15)

அவர்நெஞ்சு அவர்க்கு ஆதல்கண்டும் எவன்நெஞ்சே /

நீஎமக்கு ஆகா தது (குறள்1291)