குறுந்தொகை: பாடல் 154

குறுந்தொகை 154 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

யாங்கு அறிந்தனர்கொல் தோழி! பாம்பின்

உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,

இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,

பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை

பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்

தயங்க இருந்து, புலம்பக் கூஉம்

அருஞ் சுர வைப்பின் கானம்

பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.

மதுரைச் சீத்தலைச் சாத்தன்

யாங்கு - எவ்வாறு / எப்படி

உருப்பு - பேய்த் தேர்

அவிர்தல் - விளங்குதல்

உருப்பவிர் அமையம் - நண்பகல்

வேட்டு எழுந்த - விரும்பிப் பறந்து சென்ற

உள்ளி - நினைத்து

கவடு - கிளை

புலம்பக் கூஉம் - தனிமையால் கூவுதல்

வைப்பு - நிலம்,இடம்

வல்லுவோர் - வன்மை உடையோர்

ஆனாது - தவிராது( அமையாது)