குறுந்தொகை: பாடல் 155
குறுந்தொகை 155 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; ''மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்'' என்னும் உரை வாராதே.
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது.
உரோடகத்துக் கந்தரத்தன்
முதைப்புனம் - பழைய கொல்லை
கொல்லுதல் - வெட்டிப் பண்படுத்துதல்
ஆர்கலி - ஆரவாரம்
உழவர்- இடையர்
வட்டி - சிறு கொட்டம்
விதைக்குறு வட்டி - விதைத்தற்குரிய குறிய வட்டி
வந்தன்று - வந்தது
மெழுகு - அச்சு
ஆன்று - அமைத்து
ஊதுலை - கொல்லுலை
பகுவாய் - பிளவுபட்ட வாய்
தெண்மணி - தெளிந்த ஓசை உடைய மணி
இறும்பு - குறுங்காடு
அயர்மார் - அயர்தற்பொருட்டு
