குறுந்தொகை: பாடல் 156

குறுந்தொகை 156 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!

செம் பூ முருக்கின் நல் நார் களைந்து

தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ உண்டிப் பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

முருக்கு - புரச மரம்

நார் - பட்டை

படிவ உண்டி - விரத உணவு

கற்பு - கல்வி

Discription Box

நன்றி

http://tamil concordance.in