குறுந்தொகை: பாடல் 158

குறுந்தொகை 158 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்

கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்

காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!

ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை

இமயமும் துளக்கும் பண்பினை;

துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?

தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

ஒளவையார்

கடுவிசை - வேகம்,விரைவு

உரும் - இடி

கழறுகுரல் - வன் குரல்

அளைஇ - கலந்து

காமம் - நிறைவு

மாமழை - பெரிய மழை

ஆர் அளி - பெருமைக்குப் பொருந்திய அருள்

பேரிசை இமயம் - தலை சிறந்த மலை

பெண்டிர் - தலைவி