குறுந்தொகை: பாடல் 159
குறுந்தொகை 159 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?'' என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே.
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது;
உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்.
வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
தழை அணி - தழை உடை
நுழை - நுணுகிய,சிறிய
எவ்வம் - துன்பம்
அம் மெல் ஆகம் - அழகும் மென்மையும் உடைய மார்பு
கொம்மை - இளமை, திரட்சி, பருமை
வரி - தேமல், தொய்யில்
எதிரின - மாறுபட்டன
பூங்குழை - அன்மொழித்தொகை
அவலம் - துன்பம்
உசாவா- வினை எச்சம்
(உசாவி என்னும் பொருட்டு)
நன்றி : http://tamil concordance.in
