குறுந்தொகை: பாடல் 161

குறுந்தொகை 161 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,

கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்

புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,

''அன்னா!'' என்னும், அன்னையும்: அன்னோ!

என் மலைந்தனன்கொல் தானே தன் மலை

ஆரம் நாறும் மார்பினன்

மாரி யானையின் வந்து நின்றனனே?

இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

நக்கீரர்

எல்(பெயர்ச்சொல்)-சூரியன், இலங்குவது, ஒளி விடுவது

எல்-இரவு, எல்லின்று- இருண்டது, இருட்டிவிட்டது (இருளுக்கு ஆகுபெயர்) ('எல்' என்னும் பெயரடியாய் எல்லின்று என்னும் வினைச்சொல் பிறந்தது)

பெயல் - மழை

ஓவாது - ஒழிவின்றி

கழுது - பேய்

கண்பனிப்ப - சிம்புளித்து நடுங்க

புலிப்பல் தாலி - புலிப்பல் கோர்த்த , சிறுவர் சிறுமியர் அணியும் அணிகலன்

புதல்வன் - தலைவியின் தம்பி

புல்லி(வினை.) - தழுவி

அன்னா - விளி

அன்னோ - இரக்கக் குறிப்பு

மலைதல் - வியத்தல்

மாரி யானை - மழையில் நனைந்த யானை

புலிப் பல் தாலி புதல்வன் புல்லி(குறுந்.161:3)

பொன் உடைத் தாலி என் மகன் (அகம்.54:18)

தாலி களைந்தன்றும் இவனே(புறம்.77:7)

புலிப் பல் தாலி புன்தலைச் சிறார் (புறம்.374:9)

பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி(அகம்.54:18)

பொன்னொடு/ புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி(அகம்.7:17-18)

வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்(ஐங்.166:2)

நன்றி - http://tamil concordance.in