குறுந்தொகை: பாடல் 162

குறுந்தொகை 162 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்

பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை

முல்லை! வாழியோ, முல்லை! நீ நின்

சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;

நகுவை போலக் காட்டல்

தகுமோ, மற்று இது தமியோர் மாட்டே?

வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பனாய் உரைத்தது.

கருவூர்ப் பவுத்திரன்

புறந்தருதல் - பாதுகாத்தல்

வியன் புலம் - அகன்ற புலம்(நிலம்)

முல்லை - விளி

முறுவல் - புன்னகை

காட்டல் - காட்டாதே

தமியோர் - பிரிந்திருப்போர்,தனித்திருப்போர்

மற்று,ஏ - அசை

நன்றி - http://tamil concordance.in