குறுந்தொகை: பாடல் 163

குறுந்தொகை 163 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

யார் அணங்குற்றனை கடலே! பூழியர்

சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன

மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.

வெள் வீத் தாழை திரை அலை

நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?

தன்னுள் கையாறு எய்திடு கிளவி

அம்மூவன்

அணங்கு - வருத்தம்

பூழி - நாடு

வெள்ளை- வெள்ளாடு

தோடு - தொகுதி , கூட்டம்

பரந்தன்ன - பரவினால் போல

குருகு - கொக்கு

வெள் வீ - வெள்ளை மலர்

பூழியர்

--------------

குறுந்தொகை 1

நற்றிணை 1

அகநானூறு 1

புறநானூறு 1

பதிற்றுப்பத்து 4

நன்றி - http:// tamil concordance.in