குறுந்தொகை: பாடல் 165
குறுந்தொகை 165 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர்
மகிழ்தல் - கள்ளுண்டு களித்தல்
தலையும் - பின்னும்
இருங்கரை- மணற் கரை
உப்பு ஒய் சகடம் - ஒய்தல் இழுத்தல்,செலுத்துதல்,போக்குதல்
பெரும் பெயல் - பெரிய மழை
தலைஇய - பெய்ய,பொழிய
வீதல் - அழிதல்
பல்கூந்தல் - ஐந்து பகுதியாகப் பின்னப்படும் கூந்தல்
இயல் அணி - இயற்கை அழகு
