குறுந்தொகை: பாடல் 166

குறுந்தொகை 166 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை

நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,

ஊரோ நன்றுமன், மரந்தை;

ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.

கூடலூர் கிழார்

பறை - சிறகு

நிரை - வரிசை

மரந்தை - கடற்கரைப் பட்டினம்

புலம்பு - தனிமை

நன்றி - http://tamil concordance.in