குறுந்தொகை: பாடல் 167

குறுந்தொகை 167 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,

கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்

''இனிது'' எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

கடிநகர்ச் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.

கூடலூர் கிழார்

முளிதயிர் - முதிர்ந்த தயிர்

காந்தள் - இதழுக்கு ஆகுபெயர் (கோடல்)

கழாஅது - இசை நிறை அளபெடை

உடீஇ - சொல்லிசை அளபெடை

குவளை - மலர்

கழும் - கண்ணில் புகை நிறைய (கமழ் - பாட வேறுபாடு)

தீம்புளிப்பாகர் - மோர்க்குழம்பு