குறுந்தொகை: பாடல் 168
குறுந்தொகை 168 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது
சிறைக்குடி ஆந்தையார்
மாரிப் பித்திகம் - பிச்சி
கொழு முகை - கொழுத்த அரும்பு
புணை- தெப்பம்
சாய் இறை - வளைந்த சந்து
பணைத் தோள் - மூங்கில் போன்ற தோள்
