குறுந்தொகை: பாடல் 169
குறுந்தொகை 169 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது;
இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம்.
வெள்ளிவீதியார்
கல் உறு கோடு - மலையைக் குத்திய யானையின் கொம்பு
தெற்றென - விரைவாக
இறுதல் - ஒடிதல், முறிதல், அழிதல், கெடுதல்
வால் வெள் எயிறு - ஒரு பொருட் பன்மொழி
மண்டை - கலம்
இறீஇயர் - அழிக, நீங்குக
