குறுந்தொகை: பாடல் 171

குறுந்தொகை 171 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

காண் இனி வாழி தோழி யாணர்க்

கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட

மீன் வலை மாப் பட்டாஅங்கு,

இது மற்று எவனோ, நொதுமலர் தலையே?

வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பூங்கணுத்திரையார்

யாணர் - புது வருவாய்

மா - விலங்கு

எவன் - யாது பயன்,பயனில்லாத முயற்சி

நொதுமலர் - அயலார்

நொதுமலர் தலை - அயலார் இடத்து